சினிமா பாணியில் பள்ளி மாணவன் கடத்தல் - பட்டப்பகலில் மாணவனை கடத்தி சென்ற கும்பல்
பதிவு : பிப்ரவரி 18, 2021, 02:52 PM
சென்னையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். அக்காவுக்காக தம்பி கடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பள்ளி மாணவரை கும்பல் ஒன்று துணிச்சலாக கடத்தும் காட்சிகள் தான் இது. படப்பகலில் சினிமா பாணியில் நிகழ்ந்த இந்த கடத்தலுக்கு பின்னால் ஒரு காதல் கதை உள்ளது. சென்னை அருகே உள்ள செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். காய்கறி வியாபாரியான இவருக்கு ஜமுனா என்ற பெண்ணும், 12-ம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்ற மகனும் உள்ளனர். கணேஷின் அக்கா ஜமுனாவும் அவர்களது அத்தை மகனான புதுக்கோட்டையை சேர்ந்த பூபதியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பூபதியும், ஜமுனாவும் புதுக்கோட்டையில் தங்கி குடும்பம் நடந்தி வந்ததை அறிந்த மாரியப்பன், ஜமுனாவை  பூபதிக்கு தெரியாமல் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பூபதி, மாரியப்பனை மிரட்டுவதற்காக தனது நண்பர்கள் 5 பேருடன் சென்னைக்கு வந்து ஜமுனாவின் தம்பியான பள்ளி மாணவன் கணேஷை கடத்தியுள்ளார். கடத்திவிட்டு செல்லும்போது காரில் இடம் இல்லாததால் உடன் வந்த சந்தோஷ் குமாரை அங்கேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதைபார்த்த மக்கள் சந்தோஷ் குமாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சந்தோஷ் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் மாணவனை கடத்திக்கொண்டு புதுக்கோட்டைக்கு செல்வது தெரியவந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள  சுங்கச்சாவடியில் வைத்து பூபதி மற்றும் கடத்தல்கும்பலை கைது செய்த போலீசார் ,மாணவர் கணேஷை பத்திரமாக மீட்டனர். குடும்ப பிரச்னையால் நடந்த இந்த கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

359 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

120 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் பணப்பை திருட்டு - ஒற்றை ஆளாய் நின்று கெத்து காட்டிய இளைஞர்

சென்னையில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை தனி ஒருவராக இளைஞர் ஒருவர் விரட்டி சென்று கெத்து காட்டி இருக்கிறார். அந்த அந்த இளைஞர், என்ன நடந்தது?

52 views

பட்டாசு ஆலை வெடி விபத்து - நான்கு பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான வழக்கில், பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

7 views

தேமுதிகவில் பிப்.25 முதல் விருப்ப மனு - "மார்ச் 5 ஆம் வரை விருப்ப மனுக்களை பெறலாம்" - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

13 views

பெட்ரோல் - டீசல் விலை 30 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 91 ரூபாய் 98 காசுகளாக உள்ளது.

27 views

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட விவகாரம் : சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கு - "மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுக்கப்படும்"

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

21 views

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" - மீண்டும் மேடையில் பாடிய அமைச்சர்

அமைச்சர் ஜெயக்குமார், மேடையில் மீண்டும் பாடல் ஒன்றை பாடியுள்ளர்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.