அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட விவகாரம் : சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கு - "மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுக்கப்படும்"

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட விவகாரம் : சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கு - மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுக்கப்படும்
x
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் ,  தங்களை கட்சியின் பொது செயலாளர் மற்றும் துணை பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும்  மனுவில் தெரிவித்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கட்சி குறித்த அனைத்து ஆவணங்களையும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்பிறகு, வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்ட்டது. 

கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என்று சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முறையிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு மார்ச் 15ம் தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்