சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடு - தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை
x
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனையை அவர் மேற்கொள்ள உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு,   வாக்குச்சாவடி மையங்களை கண்டறியும் பணி, தேர்தல் அலுவலர்களை நியமிக்கும் பணி உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையக் குழு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாகவும், அதனை முறைப்படி செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாக சாகு தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான  சோதனைகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 10 அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்