69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

அரசு பணியில் இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசு சார்ந்த விஷயம் என்பதால் அதில் மத்திய அரசுக்கு எந்த பங்குமில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
x
தமிழகத்தில் அரசு வேலையில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்குத் தடை கோரி சென்னையை சேர்ந்த தினேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் உதவிச் செயலர் என்.எஸ். வெங்கடேஷ்வரன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அரசு வேலைவாய்ப்பில், கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகள் கொண்டிருக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வேறுபட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அரசு பணி வழங்குவது மாநில அரசு சார்ந்த விஷயம் என்றும் இதில்  மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை எனவும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்