மூத்த குடிமக்கள் தபால் வாக்கு: "தொகுதி வாரியாக பட்டியல் வழங்க வேண்டும்" - திமுக சார்பில் கே.என்.நேரு வழக்கு

தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க கோரி, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மூத்த குடிமக்கள் தபால் வாக்கு: தொகுதி வாரியாக பட்டியல் வழங்க வேண்டும் - திமுக சார்பில் கே.என்.நேரு வழக்கு
x
தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க கோரி, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டியலை வழங்கக் கோரி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு அனுப்பியும் பதில் இல்லை எனத், தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்