காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்?

காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்?
x
காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

உலகை இயங்க வைக்கும் ஒற்றைச் சொல்... அழகு, அறிவு, வயது, வசதி, காமம் கடந்து ஒரு காட்டாற்றைப் போல் மனித மனங்களை அடித்து செல்லும் அரும்பொருள்.

இந்த பிரபஞ்சத்தில் உருவமில்லா பொருட்களுக்குத் தான் சக்தி அதிகம்... கடவுள், ஞானம் என்ற இந்த வரிசையில் காதலையும் சேர்த்துக் கொள்ளலாம். உருவமற்றது... ஆனால் உணர்வுமிக்கது.

காதல் என்றாலே நம் நினைவுக்கு வருவது ரோஜாப்பூக்கள். காதலர்களின் அறிவிக்கப்படாத தேசிய மலர் இது.

மனதில் ஆர்ப்பரித்து எழும் உணர்வுகளை ஒற்றைப் பூவில் அடக்கி,  நமக்கானவரிடம் காதலை வெளிப்படுத்தப் பயன்படும் 
ஒரு மத்தியஸ்தர் தான் ரோஜா மலர்.

அதிலும் சிகப்பு ரோஜாப்பூக்கள் காதலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன???.

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மலர்கள் விளைந்திருந்தாலும், மலர்களின் ராணியாக விளங்கும் ரோஜாக்களுக்கென்று
ஒவ்வொரு கலாசாரத்திலும் ஒவ்வொரு கதையுண்டு.

ரோஜா மலர்களை உருவாக்கியது, மேற்கத்திய கலாச்சாரப்படி,  காதல் மற்றும் அழகுக்கான கிரேக்க தெய்வம் அஃப்ரொடைட்.

இந்த காதல் தேவதையின் காதலன் அடோனிஸ் இறந்த போது அஃப்ரொடைட் சிந்திய கண்ணீரும், அடோனிசின் ரத்தமும் கலந்து மலர்ந்ததுதான் இந்த ரோஜா மலர் என்று ஒரு கதை உண்டு.

அதைப்போலவே, ரோமானிய கலாச்சாரப்படி, ரோஜா என்பது, அழகுக்கும் அன்புக்குமான மலர். வானுலகில் வசிக்கும் தேவதைகளின் இருப்பிடங்கள் ரோஜா மலர்களால் நிறைந்திருக்கும் என்றும், குளிப்பதற்குக் கூட ரோஜா இதழ்கள் நனைந்த நீரைத்தான் பயன்படுத்துவார்கள் என்றும் கூறுவார்கள்.

மேலும், இந்துக்களின் கலாச்சாரப்படி, உலகிலேயே எந்த மலர் மிகவும் அழகானது என்று விஷ்ணு மற்றும் பிரம்மாவுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்றதாகவும், அதில் இறுதியில் வென்றது ரோஜா மலர்தான் எனவும் கூறுவார்கள். 

இப்படியாக ஒவ்வொரு கலாச்சாரத்திலும், ஆன்மீக ரீதியாகவும் இந்த மலர்களுக்கு முக்கியத்துவம் உண்டு.

பார்க்கும்போதே கிரங்கடிக்கும் வண்ணத்தில், பட்டு போன்ற மென்மையுடன் நம் உணர்வுகளோடு ஒட்டிக் கொள்ளும் இந்த ரோஜா மலர்கள், தூய்மை, தோழமை, மற்றும் அன்பின் பிரதிபலிப்பாக உள்ளன.

காதலர் தினத்தில் , உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களை வசீகரிக்க, மனதில் உள்ள ஒட்டுமொத்த காதலையும் ஒன்று திரட்டி, ஒற்றைப் பூவாகவோ பூங்கொத்தாகவோ கொடுத்து விடுங்கள். ஏனெனில், இயற்கையாகவே ரோஜாக்களுக்கு மனங்களை மயக்கும் அபார சக்தி உண்டு.

ரோஜாக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் ஒன்றும் தாவரவியல் நிபுணராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பார்த்த உடனேயே ஓர் உணர்வு தோன்றுமே... கண்டதும் காதல் என்பதைப்போல ரோஜாப் பூக்களைப் பார்த்தாலும், முகர்ந்தாலும் பரவசமே.

மலர்களைப் போல மென்மையாக காதலில் கலந்திடவும்... பூவிதழ்களில் சாயமேறிய நிறத்தைப்போல ஆழமாக அன்பில் கரைந்திடவும் காதலர் தினத்தில் ரோஜாப் பூக்கள் அவசியம் என்பதை மறுத்திட முடியாது.

Next Story

மேலும் செய்திகள்