ரூ.90-ஐ கடந்தது பெட்ரோல் விலை

தமிழகத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது.
x
தமிழகத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே பெட்ரோல் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி,  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடலூரில் 91 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

இதுபோல, டீசல் விலையும் 85 ரூபாயை நெருங்கியுள்ளது. அதன்படி, லிட்டருக்கு 83 ரூபாய் 18 காசுகளுக்கு டீசல் விற்பனையாகிறது. கடலூரை பொறுத்தவரை 84 ரூபாய் 83 காசுகளுக்கு டீசல் விற்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்