துறைமுகங்கள் ஆணைய மசோதா - மாநிலங்களவையில் த.மா.கா. ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுகங்கள் ஆணைய மசோதாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் ஆணைய மசோதா - மாநிலங்களவையில் த.மா.கா. ஆதரவு
x
மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுகங்கள் ஆணைய மசோதாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் பேசிய அவர், இதன் மூலம் பிரதான துறைமுகங்களின் வருவாயை பெருக்க முடியும் என்றார். முதலீடுகளை ஈர்க்க அதிக அதிகாரம் பெறுவதுடன், துறைமுகங்கள் சுதந்திரமாக செயல்படவும் வழிவகுக்கும் என வாசன் கூறினார். காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்துவதோடு, தூத்துக்குடி வ.வு.சிதம்பரனார் துறைமுகத்தை முக்கிய கேந்திரமாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், மதுரவாயல்-சென்னை துறைமுக பறக்கும் சாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வாசன் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்