ஸ்டாலின் உள்பட 18 பேர் மீதான 2வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
x
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 18 பேருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ரத்து செய்த தலைமை நீதிபதி அமர்வு, திருத்தம் செய்து புதிய மனு தாக்கல் செய்யலாம் என கூறியது. இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது இரண்டாவது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாக எடுத்துக் காட்டவே இது நடந்ததாக திமுக தரப்பு வாதிட்டது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது, உரிமை மீறல் குழுத் தலைவரான துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த  நோட்டீ​ஸை ரத்து செய்யுமாறு திமுக வாதிட்டது. கடந்த செப்டம்பரில் இரண்டாவது முறையாக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்