இந்திய முஸ்லிம் என்பதில் எனக்கு பெருமை- குலாம் நபி ஆசாத்

இந்திய முஸ்லீம் ஆக இருப்பதில், பெருமை கொள்வதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம் என்பதில் எனக்கு பெருமை- குலாம் நபி ஆசாத்
x
இந்திய முஸ்லீம் ஆக இருப்பதில், பெருமை கொள்வதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவு பெறும் நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்கள், நெகிழ்ச்சியுடன் குலாம் நபி ஆசாத் உடனான, நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

எப்போதும், உறுப்பினர்களின், விவாதம் - முழக்கத்துடன் காணப்படும் மாநிலங்களவை. செவ்வாய்கிழமையன்று, கண்ணீரால், நிரம்பி, நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது

காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்வில் பிரதமர் மோடி, அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். குறிப்பாக, பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், மனித நேயம் மிக்கவர், என புகழாரம் சூட்டினார். ஜம்மு காஷ்மீரில், யாத்ரீகர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு, குலாம் நபி சிந்திய கண்ணீர் இன்றளவும் மறக்க முடியாது என பிரதமர் மோடி உருக்கத்துடன் கூறினார். 

இதனையடுத்து, திமுக எம்.பி., திருச்சி சிவா, அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர், குலாம் நபி ஆசாத்திற்கு புகழாரம் சூட்டினர். பின்னர் தம்மை பாராட்டி பேசியவர்களுக்கு நன்றி கூறிய குலாம்நபி ஆசாத், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சராக இருந்த போது வாஜ்பாய் எதிர்கட்சித் தலைவராக இருந்ததை நினைவு கூர்ந்தார். 

 ஜம்மு காஷ்மீரில் முதல்வராக இருந்த போது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் பற்றி நினைவுகூர்ந்த குலாம் நபி ஆசாத், தீவிரவாதம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக கண்ணீருடன், கூறினார்.

பாகிஸ்தானில் நிகழும் சில அசம்பாவிதங்களை பார்க்கும் போது இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமை கொள்வதாகவும், குலாம் நபி ஆசாத் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். குலாம் நபி ஆசாத், பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் ஒருவித சோகம் காணப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்