மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி

தமிழகத்திலேயே அதிக விவசாய பாசனவசதி பெறும் பகுதியாக மொடக்குறிச்சி தொகுதி இருக்கிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், அந்தத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? பார்க்கலாம்....
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
x
தமிழகத்திலேயே அதிக விவசாய பாசனவசதி பெறும் பகுதியாக மொடக்குறிச்சி தொகுதி இருக்கிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், அந்தத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? பார்க்கலாம்....60 சதவீதம் மக்களின் பிரதான தொழிலாக விவசாயத்தைக் கொண்ட தொகுதி மொடக்குறிச்சி. விசைத்தறி தொழிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை முன்னிறுத்தி, 1996ம் ஆண்டு ஆயிரத்து 33 வேட்பாளர்கள் போட்டியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி.மகுடேஸ்வரர் ஆலயம், வடிவுடைய நாயகி அம்மன் கோவில், வீரநாராயண பெருமாள் கோவில் என, தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற கோவில்களால் ஆன்மீகச் சிறப்பும் கொண்டிருக்கிறது.  

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிவாக்காளர்கள் விவரம்

மொடக்குறிச்சி தொகுதியில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 64 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 47 பெண் வாக்காளர்கள், 19 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 130 வாக்காளர்கள் உள்ளனர். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்.1967 முதல் இதுவரை 12 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள மொடக்குறிச்சி தொகுதியில், அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், சங்கத சோசலிச கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.2016 சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த வி.பி.சிவசுப்ரமணியன் வெற்றிபெற்று, எம்.எல்.ஏ.வாக உள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்