சசிகலா தலைமையில் பேரணி நடத்த திட்டம் - அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு

சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ள நிலையில், அவரின் தலைமையில் சென்னையில் பேரணி நடத்த சென்னை காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
சசிகலா தலைமையில் பேரணி நடத்த திட்டம் - அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு
x
பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.  நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ள நிலையில் அவரை வரவேற்கவும், பேரணி நடத்தவும் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அமமுக சார்பில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் இந்த மனுவை அளித்துள்ளார். சென்னை போரூர் முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை செல்லும் இந்த பேரணியில் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனைக்கு பின் தெரிவிக்கப்படும் என  சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 

சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் - அதிமுக தொண்டர்கள் சார்பில் போஸ்டர்கள்

சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ள நிலையில் அவரை வரவேற்று விருதுநகரில் அதிமுக தொண்டர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடிமட்ட தொண்டரும் முதல்வராகலாம் என்ற நிலையை உருவாக்கியவர் சசிகலா என்றும் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. சசிகலாவை வரவேற்று தொடர்ந்து ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்