அப்பவே அப்படி..! சட்டமன்றத்தில் முதல் சினிமா நட்சத்திரம்

இந்திய அரசியல் வரலாற்றிலேயே, சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த முதல் திரை பிரபலம், தமிழகத்தை சேர்ந்தவர் தான்.... அந்த பிரபலத்தை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
அப்பவே அப்படி..! சட்டமன்றத்தில் முதல் சினிமா நட்சத்திரம்
x
"நம்ம எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்த சினிமாதான்... அமெரிக்காவில் ஆட்சியமைத்ததும் இந்த சினிமாதான்" வரிகள் மட்டும்...

அரசியலுக்கும் திரையுலகுக்கும் இடையிலான பந்தம் பிரிக்க முடியாதது. தமிழகம் தொடங்கி  அமெரிக்கா வரையிலும் இதற்கு உதாரணங்கள் ஏராளம். அந்த வகையில், இந்தியாவிலேயே முதன் முதலாக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த திரை பிரபலம் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்...

அவர் வேறு யாருமல்ல, இசை ரசிகர்களின் நாவிலும் நினைவிலும் நிலைத்திருக்கும் கே.பி.சுந்தராம்பாள் தான்..

கரூர் அருகே கொடுமுடி தான் அவரது சொந்த ஊர். சிறு வயதில் இருந்தே கணீர் குரலுக்கு சொந்தக்காரரான, கே.பி.சுந்தராம்பாள், ஒரு முறை ரயில் பயணத்தின்போது பொழுதுபோக்காக பாட,  ரயிலில் வந்த நாடக நடிகர் ஒருவர் மூலமாக, வாழ்வில் திருப்பு முனை ஏற்பட்டது. 

நாடக குழுக்களுடன் சிறு வயதிலேயே இலங்கை வரை சென்று வந்தவர் கேபிஎஸ். ஆரம்பத்தில் நாடக இடைவேளை நேரத்தின் என்டர்டெய்னராகத்தான் கேபிஎஸ் இருந்தார். நாடகங்களில் வேஷம் கட்ட ஆரம்பித்ததும் வள்ளி திருமணம், நல்ல தங்காள், கோவலன் என அவரது நாடகங்கள் எல்லாம் வசூலை வாரி குவித்தன. கூடவே, கேபி சுந்தராம்பாள் - கிட்டப்பா ஜோடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, 1927ம் ஆண்டில் நிஜத்திலும் அவர்கள் தம்பதியானார்கள்.

கேபிஎஸ் போலவே, கிட்டப்பாவின் குரலும் எட்டுக்கட்டை சுருதியை கொண்டது. இருவருமே மிக தீவிரமான சுதந்திர போராட்ட தியாகிகள். தேசபக்தி பாடல்களை பாடியதோடு, தனி இசைத் தட்டுகளாகவும் வெளியிட்டனர். 75 ஆண்டுகளுக்கு முன்பே, இசை ஆல்பம் வெளியிட்ட பெருமை கேபிஎஸ் தம்பதியையே சேரும்

திருமணமாகி ஆறே ஆண்டுகளில் கிட்டப்பா காலமாகி விட, வெள்ளை நிற கதர் ஆடை தரித்து சன்னியாசியாகவே மாறி விட்டார், கே.பி.சுந்தராம்பாள். ஆனால், சுதந்திர போராட்ட குரலை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

Next Story

மேலும் செய்திகள்