சாதிச்சான்று வழங்காத விவகாரம் - மனித உரிமைகள் ஆணையம் சம்மன்

பழங்குடியினருக்கான சாதிச் சான்று வழங்காத விவகாரம் தொடர்பாக, தலைமை செயலாளர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 2 வருவாய் கோட்டாட்சியர்களுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சாதிச்சான்று வழங்காத விவகாரம் - மனித உரிமைகள் ஆணையம் சம்மன்
x
பழங்குடியினரின் வாரிசுகளுக்கான சாதிச்சான்று வழங்குவதை, அதிகாரிகள் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக கடந்த 2018ஆம் ஆண்டு, மாநில மனித உரிமை ஆணையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு புகார் அனுப்பி இருந்தார். அதற்கு பின்னரும், அதிகாரிகள் தொடர்ந்து சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்ததால், தற்போது மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேருக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை தமிழக அரசிடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து தமிழக அரசு தலைமைச்செயலாளர், திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர், மார்ச் 9ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி சம்மன் அனுப்பி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்