சென்னையில் 6,123 வாக்குச்சாவடி மையங்கள் - புதிதாக 2,369 துணை வாக்குச்சாவடிகள்

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே 901 இடங்களில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வந்தன.
சென்னையில் 6,123 வாக்குச்சாவடி மையங்கள் - புதிதாக 2,369 துணை வாக்குச்சாவடிகள்
x
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே 901 இடங்களில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடி மையம் அமைக்க உத்தரவிட்டது. இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2ஆயிரத்து 369 துணை வாக்குச்சாவடி மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் ஆயிரத்து 53  இடங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 123 வாக்குச்சாவடிகள் மையங்கள் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ்  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்