மதுபோதையில் தகராறு - மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்
பதிவு : பிப்ரவரி 05, 2021, 03:38 PM
மதுபோதையில் மகளையும் பேத்தியையும் துன்புறுத்தி வந்த மருமகனை மாமனாரே வெட்டிக் கொன்ற சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபோதையில் மகளையும் பேத்தியையும் துன்புறுத்தி வந்த மருமகனை மாமனாரே வெட்டிக் கொன்ற சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கேணிக்கரையை சேர்ந்தவர் நாகநாதன். இவருக்கும் பொதுவக்குடியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சங்கீதாவுக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக சங்கீதா வேலை பார்த்து வந்த நிலையில் நாகநாதன் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வந்ததாக தெரிகிறது. 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்தி வந்துள்ளார். திருமணம் செய்து கொடுத்த மகள் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறார் என நினைத்திருந்த கருப்பையாவுக்கு மருமகனின் செயல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

பலமுறை அன்பாக எடுத்துக் கூறியும் நாகநாதன் தன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் விரக்தியடைந்த கருப்பையா, தன் மருமகன் தன் மகளுக்கு கொடுக்கும் தொல்லைகள் குறித்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நாகநாதனை அழைத்து எச்சரித்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த நாகநாதன் மேலும் குடித்து விட்டு வந்து மீண்டும் தன் மனைவி, பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வெறுத்துப் போன கருப்பையா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மருமகனை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பின்னர் நேராக எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு சென்ற கருப்பையா நடந்ததை கூறி சரணடைந்தார். நாகநாதனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகனை மாமனாரே வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

453 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

108 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

262 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

69 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

25 views

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 views

யானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.