அப்பவே அப்படி..! கோட்டைக்கு வெளியே சட்ட மன்றம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம், தொடர்ந்து ஒரே இடத்தில் நடைபெற்றது இல்லை. இதற்கு முன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் பற்றிய தகவல்களை இன்றைக்கு பார்க்கலாம்
அப்பவே அப்படி..! கோட்டைக்கு வெளியே சட்ட மன்றம்
x
சட்டப்பேரவை தேர்தல் என்றதுமே கோட்டையை பிடிப்பது நாங்கள் தான், என ஒவ்வொரு கட்சியினரும் சொல்லுவது வழக்கம். அவர்கள் சொல்லும் கோட்டை செயின்ட் ஜார்ஜ் கோட்டை. ஏனென்றால், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது அங்குதான். தமிழக ஆட்சி பரிபாலன தலைமையகமும் அதுதான் சென்னை மாகாணமாக தமிழகம் இருந்த சமயத்தில், சட்டப்பேரவைக்கு முன்பாக, சட்ட மேலவை மட்டுமே இருந்த காலத்திலேயே இங்குதான் கூட்டத் தொடர் நடந்திருக்கிறது.

1921ம் ஆண்டு முதல் 1937 வரை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த கவுன்சிலர்கள் அறையில்தான் சட்ட மேலவை கூட்டம் நடந்தது. 1921ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியன்று கோட்டையில் முதலாவது கூட்டம் கூடியது.
17 ஆண்டுகளுக்கு பிறகு, 1937ம் ஆண்டில் புதிதாக சட்டப்பேரவை அமைப்பை உருவாக்கி தேர்தலும் நடந்ததால், இரண்டு அவைகளும் சேர்த்து உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தை சென்னை பல்கலைக் கழகத்தின் செனட் சபை அரங்குக்கு மாற்றினார்கள். 1937, 1938 ஆகிய ஆண்டுகளில் அங்குதான் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன்பிறகு 1938, 1939 ஆகிய ஆண்டுகளில் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் சட்டப்பேரவை கூட்டங்கள் நடைபெற்றன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என தலைவர்களின் இறுதி அஞ்சலி நடைபெற்ற இடம் தான் இந்த ராஜாஜி ஹால்.. 1990களில் வெளியான பல தமிழ் திரைப்படங்களிலும் இந்த ராஜாஜி ஹாலை பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்