"வருமானத்திற்கு அதிகமாக 1000% சொத்துகள்" - சுற்றுச்சூழல் துறை அதிகாரி மீது புகார்

லஞ்ச புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக ஆயிரம் சதவீதம் சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதாக வருமானவரித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுத முடிவு செய்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக 1000% சொத்துகள் - சுற்றுச்சூழல் துறை அதிகாரி மீது புகார்
x
லஞ்சப்புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில்  7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், மூன்று கோடி மதிப்புடைய தங்க, வைர மற்றும் வெள்ளி பொருட்கள் சிக்கின. ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கி கணக்கில் இருந்த 75 லட்சம் பணமும் முடக்கப்பட்டது. இதனிடையே லஞ்ச புகாரில் சிக்கிய பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்களை கண்டுபிடிக்க பத்திர பதிவு துறைக்கு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். அவர்கள் அளித்த 50 சதவீதம் ஆவணங்களை கணக்கீடு செய்த போது பாண்டியன் வருமானத்தை விட ஆயிரம் சதவீதம் அதிகம் சொத்துகள் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடிதம் எழுத முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்