"ஆவணம் அசல்தானா? என ஆய்வு செய்யுங்கள்" - காப்பீட்டு நிறுவனங்களுக்கு போலீசார் கடிதம்

வாகன காப்பீடு மோசடி வழக்கில் அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆவணம் அசல்தானா? என ஆய்வு செய்யுங்கள் - காப்பீட்டு நிறுவனங்களுக்கு போலீசார் கடிதம்
x
வாகன காப்பீடு மோசடியில் நெல்லையை சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், 133 சவரன் தங்க நகைகள், 3 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் 9 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களை போலீசார் தடய அறிவியல் துறை சோதனைக்கு அனுப்பி உள்ளனர். 

இந்த கும்பல் லட்சக்கணக்கில் போலி வாகன காப்பீடு ஆவணங்களை தயாரித்து கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், தங்கள் வாடிக்கையாளரிடம் இருப்பது ஒரிஜினல் ஆவணம் தானா? என, ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்