பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை
பதிவு : ஜனவரி 28, 2021, 04:45 PM
தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து, அதிலிருந்து மீண்டுவர அனைவராலும் ஒப்பிடப்படும் பறவை தான் பீனிக்ஸ்....நெருப்பில் விழுந்தாலும் வீறுகொண்டெழுந்து நீல வானில் எட்டாத உயரத்தில் ஜொலிக்கும் பறவை எனக் கூறப்படுவது வழக்கம் உண்மையில் அப்படியொரு பறவை இருந்ததா என்ற கேள்வி பதிலின்றி தொடர்கிறது.பொதுவாக பாரசீகம், கிரேக்கம், எகிப்து மற்றும் சீனா புராணக் கதைகளில் இடம்பெறும் வலிமை மிக்க நெருப்பு பறவை பீனிக்ஸ்.அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் அதனுடைய தோற்றம் குறித்து பல்வேறு கதைகள் இருக்கின்றன.500 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையில் வாழும் எனக் இதிகாசங்களில் கூறப்படுகிறது.இவ்வாறு நீண்ட நாள் வாழும் பறையானது மரணம் தன்னை நெருங்கிறது என அறியவந்ததும், வாசனையான மரச்ச்சுள்ளிகளை சேகரித்து அதில் தீ வைத்து தன்னைத் தானே மாயத்துக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.பின்னர் எரிக்கப்பட்ட சாம்பலில் இருந்து புழுவாகவும், பின்னர் பறவையாகவும் வளர்ர்ச்சியடைகிறது என நிறைய கற்பனைகளை சுமந்து செல்கிறது பீனிக்ஸ் பறவை.பறக்கும் அளவிற்கு சிறு பறவையானது ஏற்கனவே எரிந்த தந்தை பறவையின் சாம்பலை உருண்டையாக்கி அதனை கிரேக்கத்தில் உள்ள சூரியக் கடவுள் கோயிலுக்கு கொண்டுச் செல்லும் என்றும் அந்த கதைகள் கூறுகின்றன.பொதுவாக செந்தூரமும் தங்க நிறமும் ஜொலிக்கும் வகையில் இறகுகளை கொண்ட பறவையாக பீனிக்ஸ் சித்தரிக்கப்படுகிறது.குருவியின் முகத்துடன், சேவலின் அலகுடனும் பொதுவாக உருவகப்படுத்தப்படும் தகதகக்கும் நெருப்பு பறவையான பீனிக்ஸ் பறவையின் வடிவமைப்பு சீன சித்திரங்களில் வேறுபடுகிறது. கலைமானின் கால்களை கொண்டிருக்கும் பறவை, மீனின் வாலுடன் அழகாக சித்தரிக்கப்படுகிறது.வண்ணங்கள் மற்றும் உருவங்கள் மாறுப்பட்டாலும் அவைகளின் குணங்கள் தொடர்பான கருத்துக்கள் வேறுபடாமல் கதையாக தொடர்கிறது.பீனிக்ஸ் பறவை வீழ்த்தவே முடியாத ரோமானிய அரசின் அடையாளமாகியுள்ளது. அமெரிக்காவின்   சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியில் பீனிக்ஸ் பறவை உருவம் இடம்பெற்றுள்ளது.பல்வேறு நாடுகளில் சிலையாக நிற்கும் பீனிக்ஸ் பறவைகள், கண்களுக்கு எட்டாத உயரத்தில் வானில் இருந்ததாக ஒரு சிலர் கூறினாலும், இது கற்பனையான பறவையே....பீனிக்ஸ் கற்பனை பறவையென்றாலும் ... அதனுடைய வலிமை, பண்புகள் மற்றும் அழகு குறித்தான தகவல்கள் கற்பனை அறிவின் அழகாக.... சுவாரஸ்யமாக அன்று முதல் இன்று வரை தொடர்கிறது...


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

376 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

149 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

67 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

38 views

பிற செய்திகள்

தர்மபுரியில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு.... 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பேருந்துக்காக சாலையில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிந்தனர்.

195 views

உசிலம்பட்டியில் 7 நாள் பெண் சிசு கொலை... நாள்தோறும் 2,000 பெண் சிசுக்கள் கருகலைப்பு...

உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை என்ற கேள்வி எழுந்துள்ளது.

78 views

மறுமணமா..? உஷார்..! உல்லாசவாழ்க்கைக்காக பெண்களை பயன்படுத்திய நபர்... சினிமா காட்சிகளை எல்லாம் மிஞ்சிய நிஜ சம்பவம்

மறுமணம் செய்ய இணையத்தில் விண்ணப்பிக்கும் பெண்ணை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் இப்போது சிறையில் கம்பி எண்ணும் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

716 views

பாட்டி, பேத்தி கொலையான சம்பவத்தில் அதிரடி - தாய், மகன், மகள் என 4 பேர் கைது

தென்காசியில் வட்டிக்கு மேல் அதிக வட்டி கேட்டதாக கூறி பாட்டி மற்றும் அவரது பேத்தியை கொடூரமாக கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

32 views

ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு - அரசியல் பேசவில்லை-ரஜினி தரப்பு தகவல்

நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன், திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

421 views

தோற்றத்தால் வசீகரிக்கும் லட்சுமி - சற்று பெரிய தந்தத்துடன் காட்சி தரும் லட்சுமி

புதுச்சேரிக்கு வந்த முதல் யானை என பெயர் பெற்ற லட்சுமி, தேக்கம்பட்டி யானைகள் முகாமில் கொள்ளை கொள்ளும் அழகியாக வலம் வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.