மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
பதிவு : ஜனவரி 28, 2021, 02:58 PM
தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த விருதை பெற காரணமான அவரது அளப்பறிய தமிழ் தொண்டையும், கலை பயணத்தை பற்றியும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இப்படி தமது வசீகர பேச்சால், மக்களை கவர்ந்தவர் சாலமன் பாப்பையா. 84 வயதான பாப்பையா  பிப்ரவரி 22, 1936ல் மதுரையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை மதுரையில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்த அவர், 
அமெரிக்கன் கல்லூரியில்,  இளநிலை தமிழ் பட்டபடிப்பை முடித்து, பின்னர் தியாகராசர் கல்லூரியில் முதுநிலை பட்டபடிப்பை முடித்தார்.
வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரிந்த பாப்பையா, பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக உயர்ந்தார். இதையடுக்கு1993 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின்,  சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை, தமக்கு உரிய நகைச்சுவை நடையில், பட்டிமன்றங்களை நடத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சாலமன் பாப்பையா. 

தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ள நிலையில், ரஜினி படத்தில் வரும் அங்கவை சங்கவை காட்சி இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத காட்சி.

தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு,72 வது குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தனது தமிழ் தொண்டால்,  கடந்த 2010 அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முத்தமிழ் பேரறிஞர் விருதை சாலமன்பாப்பையாவிற்கு வழங்கியது. 2000-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி ஆகிய விருதுகள் பாப்பையா பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

216 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

56 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்தி உத்தரவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

137 views

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

142 views

"9 முதல் 11-ம் வகுப்பு வரை தேர்ச்சி" முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

167 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

534 views

ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில் - பொங்கல் வைத்து வழிபட்ட தொண்டர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் தொண்டர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

66 views

மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை... துள்ளித்திரியும் அபயாம்பிகையின் வயது 56

மயிலாடுதுறை மக்களின் நேசத்தை பெற்ற அபயாம்பிகை யானை, இப்போது தேக்கம்பட்டி முகாமில் துறுதுறுப்பாக சுற்றி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.