வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து
வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?
x
சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

நான்கு மணி நேரத்தில் நகைகள் மீட்பு, குற்றவாளிகள் கைது, ஒருவர் என்கவுன்டர் என தகுந்த முறையில் பதிலடி கொடுத்திருக்கிறது தமிழக போலீஸ்... இருந்த போதும்... வடமாநில கும்பலால் சீர்காழியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்,  இனி யாராவது கதவை தட்டினால், திறக்கலாமா என்கிற பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதற்கு விடைகாண வேண்டும் என்றால், பழைய பயங்கரங்களை சற்று புரட்டி பார்க்க வேண்டும்.

இந்த சீர்காழி படுகொலை மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை... 
அதே சமயம், ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் முன்னாள் சென்று பார்த்தால், அவ்வப்போது இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளன... 

கதவை தட்டுவார்கள்.... தண்ணீர் கேட்பார்கள்... தண்ணீர் எடுக்க உள்ளே சென்றவுடன் பின்னாலே வந்து கதையை முடித்துவிட்டு, நகை பணத்துடன் தங்கள் மாநிலங்களுக்கு தப்பி சென்றுவிடுவார்கள்...

தொடர்ந்து வந்த இந்த சம்பவங்களால் மக்கள் கதவை திறக்கவே அச்சப்பட்டு, ரகசிய வார்த்தைகள் பயன்படுத்திய காலம் அது.. அந்த குறிப்பிட்ட வார்த்தையை கூறினால் தான் கதவே திறக்கப்படுமாம்.... 

இப்படி தமிழகத்தை ஆட்டிப்படைத்த வடமாநில கும்பல், கொள்ளையடிப்பதற்காக மட்டுமே தமிழகம் வருவார்களாம்.. 

இந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த சசுதர்சனன் என்பவரின் கொலை சம்பவம் மொத்த தமிழகத்தையும் உறைய வைத்த‌து....

இந்த கொலை சம்பவத்தை சவாலாக ஏற்றுகொண்ட தமிழக போலீசார், பவாரியா என்ற கும்பலில் சிலரை பெரும் போராட்டத்திற்கு பின் கைது செய்தனர்.

அந்த போராட்டங்களே தீரன் என்ற படமாக வெளிவந்து வெற்றி நடை போட்டது.. 

இதன் பிறகு போலீசார் எடுத்து வந்த அதிரடி நடவடிக்கைகளால், கொலை செய்து கொள்ளையடிக்கும் முறையை கைவிட்டிருந்த‌து வடமாநில கும்பல் ...

ஆனாலும் திருந்தவில்லை... வருவார்கள்... ஏதாவது ஒரு நகைக்கடையிலோ, ஓட்டல்களிலோ வேளைக்கு சேர்வார்கள், முதலாளி ஏமாந்த நேரமாக பார்த்து கிலோ கணக்கில் நகை பணத்தை திருடி கொண்டு தங்கள் மாநிலத்திற்கு ரயில் ஏறி விடுவார்கள்... எப்படியோ கொலை சம்பங்கள் குறைந்திருந்த‌தால் நிம்மதி அடைந்திருந்த‌து தமிழகம்.. 

இந்த நிலையில், சரியாக 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு பயங்கரம் சீர்காழியில் அரங்கேறியுள்ளதால், மீண்டும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.. 

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும் நிஜ தீரன் போலீசுமான ஜாங்கிட், போலீசார் தற்காப்பிற்காக சுட்டாலும், இது கொள்ளை கும்பலுக்கு சரியான பாடமாக இருக்கும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்