தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
x
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவமும் வெள்ளித் தேரோட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதனிடைய விழாவில் மிக முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. இன்று காலையில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் சூரிய தரிசனம் செய்தனர்.

 விழாவையொட்டி பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் தைப்பூசத் திருநாளை ஒட்டி இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் மையமாக அமைந்துள்ள  வடலூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். இவர் நிறுவிய 
சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஏழு திரைகள் நீக்கி ஆறு கால ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, 

தைப்பூச நாளான இன்று காலை 6 மணிக்கு முதலாவது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி என அடுத்தடுத்து ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தை ஏரானமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்