நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்
பதிவு : ஜனவரி 27, 2021, 07:26 PM
சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நகை, பணத்துக்காக வடமாநில கொள்ளை கும்பல் கொடூர கொலைகளை அரங்கேற்றும் காட்சிகளை திரையில் பார்க்கவே பதைபதைக்கும்.... ஆனால் மயிலாடுதுறை அருகே இந்த படத்தின் காட்சிகளை போலவே நிஜத்தில் நடந்திருப்பது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது... 

சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி. 50 வயதான இவர், தர்ம குளம் பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஆஷா, மகன் அகில்,  மருமகள் நிகில் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 

வழக்கம் போல இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை ஆறரை மணிக்கு வீட்டின் கதவு தட்டப்பட்டிருக்கிறது.

வாசலில் இருந்தவர்கள் இந்தியில் பேசியதால் யாரென்று விசாரிக்க கதவை திறந்துள்ளார் தன்ராஜ் சவுத்ரி... கதவை திறந்த ஒரு விநாடிக்குள் அரங்கேறியது அந்த கொடூரம்... தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தன்ராஜை வெட்டியது அந்த கும்பல். 

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி ஆஷாவை சமையலறையிலேயே வெட்டிப் போட்டது அந்த கும்பல். பின்னர் தடுக்க வந்த மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோரையும் கொடூரமாக வெட்டியது அந்த கொள்ளை கும்பல்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த 16 கிலோ தங்க நகைகளை அள்ளியுள்ளது.

பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரியின் காரிலேயே தப்பிச் சென்றது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 2 பேர் சடலமாகவும், 2 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதையும் அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றியதோடு, காயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

இதனிடையே எருக்கூர் கிராமத்தில் சிலர் பதுங்கியிருப்பதாக கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க எஸ்.பி. தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவர்களின் பெயர் மணிபால்,ரமேஷ், மணீஷ் என்பது தெரியவந்தது.

அப்போது அந்த கும்பல், துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டியதோடு தப்ப முயன்றது. கொள்ளையர்களில் ஒருவர் தாக்கியதில் எஸ்.பி.யின் உதவியாளருக்கு கையில் காயம் பட்டதாக கூறப்படுகிறது..... இதையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 3 பேரில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்...

மற்ற 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 4 மணி நேரத்திற்குள் கொள்ளை கும்பலை போலீசார் பிடித்ததோடு, அவர்களிடம் இருந்த 16 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். 

கொலை, கொள்ளை, என்கவுன்ட்டர் என அடுத்தடுத்த அதிரடிகளால் சீர்காழியே பரபரப்பாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

84 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

77 views

பிற செய்திகள்

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

31 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

252 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

136 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

316 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

80 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.