"நான் கடவுள்" எனச் சொல்லும் ஆபத்தான சிறுவன்... - பலரையும் கடித்துக் காயப்படுத்திய கொடூரம்...
பதிவு : ஜனவரி 22, 2021, 06:53 PM
நாமக்கல் மாவட்டத்தில், தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறுவன்...தன்னைச் சுற்றியிருப்பவர்களை எல்லாம் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகம்... இங்கே வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட கொலை வெறியோடு ஒரு சிறுவன் கொண்டு வரப்பட்ட போது கட்டடங்களே அதிர்ந்தன.காலையில் இருந்து இந்தச் சிறுவன் தனது ஊரில் ஐந்து பேரை கடித்து கொலை செய்ய முயன்றிருக்கிறான். அதைப் பார்த்த அந்த ஊர் இளைஞர்கள், இவனுக்கு பதிலடி கொடுத்து கைகளைக் கட்டி இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். கண்களில் கொலைவெறியோடு தென்பட்ட இந்தச் சிறுவனின் பெயர் கண்ணனாம். தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தச் சிறுவன், "நானே சிவபெருமான்" என்றும் "என் கட்டை அவிழ்த்து விடுபவர்கள் நன்றாக இருப்பார்கள்" என்றும் சொன்ன போது, கூடியிருந்த கூட்டம் அதிர்ந்து போனது.மருத்துவமனைக்குள் வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்த கண்ணனை அழைத்துப் போய் மயக்க ஊசி செலுத்துவதற்குள் மருத்துவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
மயக்கம் தெளிந்த பிறகும் இந்தச் சிறுவனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என கால், கைகள் கட்டி வைக்கப்பட்டன. 
யார் இந்தச் சிறுவன்? இத்தனை தூரம் ஆபத்தான நபராக இவன் மாறியது எப்படி? - அதை அறிவதற்காக அவன் சொந்த ஊருக்கு பயணமானோம். 
நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி, ரெட்டிக் காலனியைச் சேர்ந்த சிறுவன்தான் கண்ணன். வயது 17 தான் ஆகிறது. அதற்குள் கஞ்சா பழக்கம். சிறு வயது முதலே அம்மா இல்லை என்பதால் நல் வழிப்படுத்த ஆளில்லை. சமீப காலமாக தனக்குள்ளேயே பேசிக் கொண்டு, தன் வீட்டு பொருட்களை உடைத்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு சில நாட்களாகத்தான் ஊராரை காயப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.பைக்கில் பேய் வேகமெடுத்து பறப்பது, போகிற வருகிற பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் அழைப்பது, காயப்படுத்துவது என கண்ணனின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நிர்வாணமாக நின்றபடி ஊராரை வம்புக்கு இழுக்க ஆரம்பித்து விட்டார் இவர்.ஊரே கண்ணனை கஞ்சா போதை தலைக்கேறிய சிறுவன் என்றும் புத்தி பேதலித்தவர் என்றும் சொல்கிறது. ஆனால், பெற்ற தந்தை சண்முகம், ஊர் மக்கள் அடித்ததால்தான் தன் மகனுக்கு மூளை கலங்கிவிட்டது என்கிறார் பாசத்தோடு.எது எப்படியோ... இனி கண்ணன் இந்த ஊருக்கு திரும்பவே கூடாது. அப்படி திரும்பினால், பரிபூரணமாக குணமாகித்தான் திரும்ப வேண்டும். இல்லையேல் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

517 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

13 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

19 views

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13 views

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

45 views

கொரோனா பரவல் அதிகரிப்பு : கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையங்கள் - பெண்களுக்கு 80 படுக்கை வசதியுடன் தனி வார்டு

கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

13 views

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு குறைப்பு : "ஒட்டுமொத்த தேவையில் 20% மட்டுமே ஒதுக்கீடு" - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக குறைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.