"துறைமுக கட்டுமானம் சரியில்லை" : திமுக ஆட்சியில் சீரமைக்கப்படும்- கனிமொழி

மீனவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தேங்காய்பட்டணம் துறைமுகம் சீரமைக்கப்படும் என திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி உறுதி அளித்துள்ளார்.
துறைமுக கட்டுமானம் சரியில்லை : திமுக ஆட்சியில் சீரமைக்கப்படும்- கனிமொழி
x
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், தேங்காய்பட்டணம் துறைமுகத்தை பார்வையிட்டார். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட துறைமுகம் சிதிலமடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் சீரமைக்கப்படும் என்றார். முகத்துவார கட்டுமானம் சரியாக இல்லாததால், உயிரிழப்பு ஏற்படுவதாக கூறியதை கேட்ட கனிமொழி, மீனவர்களின் கருத்துப்படி சீரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்