சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - சாதாரண சுவாச கோளாறு என மருத்துவர்கள் தகவல்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
x
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சசிகலாவுக்கு ஏற்பட்டது சாதாரண சுவாச கோளாறு தான் என சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூரு பவுரிங் மருத்துவமனைக்கு சசிகலாவை அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளார். இந்நிலையில், இந்த உடல் நலக்குறைவால் அவரது விடுதலை தேதியில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்