ஜோதிடத்தை நம்பி வீட்டை மாற்றிய தம்பதி - கழிவறை இல்லாத வீட்டுக்கு சென்றதால் விபரீதம்
பதிவு : ஜனவரி 18, 2021, 07:16 PM
ஜோதிடத்தை நம்பி வேறு வீட்டுக்கு சென்றதால், 5 வயது மகளை அஸ்திவார குழியில் தேங்கியிருந்த தண்ணீருக்கு பலி கொடுத்திருப்பது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
திருச்சி கே.கே. நகரில் உள்ள சேஷசாயி நகரை சேர்ந்தவர் சக்திவேல். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள்... போதிய வருமானமில்லாமல் கடன் தொல்லையால் சக்திவேல் அவதிப்பட்டு வந்ததால் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் இருந்துள்ளன. இதனால் ஜோதிடர் ஒருவரை அணுகியிருக்கிறார் சக்திவேல். அப்போது தாங்கள் வசிக்கும் வீட்டை விட்டு விட்டு வேறு இடத்திற்கு சென்றால் நல்லதே நடக்கும் என ஜோசியர் கூறவே, அதை நம்பி, தன் சொந்த வீட்டை விட்டுவிட்டு விமான நிலையம் அருகே ராஜமாணிக்கம்பிள்ளை நகரில் வாடகை வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக இந்த வீட்டுக்கு அவர் தன் குடும்பத்துடன் சென்ற நிலையில் அங்கு கழிவறை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு காலைக்கடன்களை கழிக்க இவர்கள் சென்று வந்துள்ளனர். சம்பவத்தன்று சக்திவேலின் பெற்றோர் காட்டுப்பகுதிக்கு  சென்ற நிலையில் சக்திவேலின் மூத்த மகளான 5 வயதான பாண்டிஸ்ரீயும் அவர்களின் பின்னால் சென்றுள்ளார். தாத்தா, பாட்டி வீடு திரும்பிய நிலையில் பாண்டிஸ்ரீ மட்டும் திரும்பவில்லை. அப்போது தன் மகள் எங்கே என கேட்டபோது, தங்களின்  பின்னால் பேத்தி வந்ததே தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல், தன் மகளை பல இடங்களில் தேடினார். அப்போது காட்டுப்பகுதியில் உள்ள காலி மனை பகுதிகளில் தேடிய போது அங்குள்ள குழியில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. வீடு கட்டுவதற்காக போடப்பட்ட அஸ்திவார குழியில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழி எது? தரை எது? என்பது சிறுமிக்கு தெரியவில்லை. இதனால் குழியில் விழுந்த சிறுமி நீரில் மூச்சுத்திணறி உயிரை விட்டுள்ளார். சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிடத்தை நம்பி வீட்டை மாற்றியவரை விதி துரத்தியதன் விளைவாக தன் மகளை பறிகொடுத்திருப்பது சோகத்தின் உச்சம்...

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

420 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

72 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்?

வாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

18 views

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

10 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

179 views

"30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி" - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்

17 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

32 views

டோல்கேட்டை தாக்கும் த.வா.க நிர்வாகிகள் - அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.