நாளை பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை, குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
நாளை பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?
x
இது குறித்து பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும்,கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்,தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.சிங்க் மாத்திரைகளை மாணவர்கள் உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்,பள்ளி வளாகங்களில் மாணவர்கள் எச்சில் துப்ப கூடாது,உணவு பொருட்களை பரிமாறி கொள்ளக்கூடாது, இறைவணக்க கூட்டங்கள் நடத்த கூடாது,மூடிய வகுப்பறைக்குள் வகுப்புகளை நடத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வருகை பதிவேட்டிற்கான பயோ-மெட்ரிக் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்