விபத்தில் தமிழக ராணுவ வீரர் பலி - ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

ராஜஸ்தானில் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல், குன்னூர் அருகே சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விபத்தில் தமிழக ராணுவ வீரர் பலி - ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்
x
ராஜஸ்தானில் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல், குன்னூர் அருகே சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  அச்சனக்கல் மணெப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் விவேகானந்த், ராஜஸ்தானில் பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி ஜோத்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இவர் உயிரிழந்தார்.  இவரது உடல் விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் முழு மரியாதையுடன் உடல் எடுத்துவரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அடக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளூர் மக்களும் பங்கேற்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்