"2021 நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சமஸ்கிருதத்தை பரப்ப மத்திய அரசு 643 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தமிழுக்கு மிக குறைவான நிதியையே ஒதுக்கி இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
2021 நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தியை திணிப்பதோடு, புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிப்பதாகவும், கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சார்பிலான நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியக காலண்டர் வாயிலாக சமஸ்கிருதத்தை திணிப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருதத்தை பரப்ப, 643 கோடியே 83 லட்ச ரூபாயை பாஜக அரசு செலவழித்துள்ளதாக கூறும் கே.எஸ்.அழகிரி..செம்மொழி தகுதிபெற்ற தமிழ் மொழிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 22 கோடியே 94 லட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ் மீது பற்று இருப்பதை போல பிரதமர் மோடி கண் துடைப்பு நாடகம்  நடத்தி வருவதாகவும், அப்பட்டமான தமிழ் விரோத போக்கில் செயவ்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்