எம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...
எம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
x
எம்.ஜி.ஆர் என்றும் சகாப்தம். அதனால்தான், மறைந்து 33 ஆண்டுகள் ஆகியும், தமிழக தேர்தல் களத்தில் கட்சி பாகுபாடின்றி, அவரது பெயர் ஓங்கி ஒலிக்கிறது. பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் என பரவலாக புகழப்பட்டாலும், திரை வாழ்வு மூலம் மக்களுக்கு பாடமெடுத்து, வாத்தியார் என்று இன்றளவும் அவரது ரசிகர்களால் புகழப்படுகிறார் எம்.ஜி.ஆர்.  எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், அவர் கட்சி தொடங்கியதில் இருந்து, மறையும் வரை எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம் அவர்களை சந்தித்தோம்... சென்னை ஆர்.ஏ.புரத்தில், குடும்பத்தினருடன் வசித்து வரும் 69 வயதான மகாலிங்கம், தற்போது ஓய்வில் இருக்கிறார். எம்.ஜி.ஆர். பற்றி ஓரிரு வார்த்தை சொல்லுங்களேன் என்றதும், உற்சாகமாக பேசத் தொடங்கினார்... ஒருமுறை திருமண விழாவில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., அங்கே பாடப்பட்ட பாடலால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், தன் பாக்கெட்டில் பணம் இல்லாததால் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள கை கடிகாரத்தை அந்தப் பாடகருக்கு அணிவித்தார் என்றும் மெய் சிலிர்க்கிறார் மகாலிங்கம்...


Next Story

மேலும் செய்திகள்