"கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது" - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
x

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  'கோவேக்சின்' தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால்,  
அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன. இதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை மத்திய அரசு தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  சத்தீஸ்கர் மாநில அரசு கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளதையும்  மருத்துவ சங்கத்தினரும் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் முன்களப் பணியாளர்கள் யாருக்கேனும் பக்கவிளைவு ஏற்பட்டால் அவர்களுக்கான இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சந்தேகம் ஏதும் எழுப்பப்படாத நிலையிலுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்றும் அவர்  கூறியுள்ளார். உண்மை தெரிந்தே மருந்தை எடுத்துக் கொள்கிறோம் என்று மக்களிடமே இசைவு உறுதிமொழி கேட்பது சரியா? என்றும் இது பாரத் பயோ-டெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்