2 நாளில் மது விற்பனை ரூ.417.18 கோடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 417 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
2 நாளில் மது விற்பனை ரூ.417.18 கோடி
x
கடந்த 13-ம் தேதி போகி பண்டிகையன்று 147 கோடியே 75 லட்சம், 14-ம் தேதி பொங்கல் நாளில் 269 கோடியே 43 லட்சம்  என கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 417 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. 
போகியன்று சென்னையில் 39 கோடியே 8 லட்சம்,  திருச்சியில் 29 கோடியே 23 லட்சம், சேலம் மண்டலத்தில் 26 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை ஆகியுள்ளது.மதுரையில் 28 கோடியே 15 லட்சம், கோவையில் 24 கோடியே 57 லட்சம் என மொத்தம்147 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. 14ஆம் தேதி சென்னையில் 54 கோடியே 47 லட்சம், திருச்சி மண்டலத்தில் 56 கோடியே 39 லட்சம், சேலம் மண்டலத்தில் 53 கோடியே 18 லட்சம், மதுரையில் 55 கோடியே 25 லட்சம்,   கோவையில் 50 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கும் என மொத்தம் 269 கோடி ரூபாய்க்கு மது விற்றபனை ஆனதாக, தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்