"பொங்கல் செழிப்பைக் கொண்டு வரட்டும்" - தமிழக ஆளுநர் பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவிப்பதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.
பொங்கல் செழிப்பைக் கொண்டு வரட்டும் - தமிழக ஆளுநர் பொங்கல் வாழ்த்து
x
 இதுதொடர்பான வாழ்த்து செய்தியில், நாம் அமைவரும் ஒருங்கிணைந்து நமது பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், கலைகள், பண்டிகைகள் ஆகிய அனைத்தையும் பாதுகாத்திட, உறுதியான தீர்மானம் எடுத்திட முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல், ஒவ்வொருவர் வாழ்விலும் பொங்கல் பண்டிகை செழிப்பைக் கொண்டுவர வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

அதிமுக சார்பில் பொங்கல் வாழ்த்து
"பொங்கலை கொண்டாட ரூ.2,500 வழங்கிய அரசு"
"இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்"
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு, அதிமுக சார்பில் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத்தொகையுடன், பொங்கல் தொகுப்பினை அதிமுக அரசு கொடுத்து சிறப்பித்துளளதாக கூறி, பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். 

நல்லாட்சி மலர பொங்கல் வழிகாட்டும்"
தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், போகிப் பண்டிகையின் போது, தேவையற்ற பொருட்களை வெளியே தூக்கி எறிவது போல, தேவையற்ற ஆட்சிகளை தூக்கியெறிய உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார். மேலும், தை பிறந்தால் வழியும் பிறக்கும் என்பதைப் போல, நல்லாட்சி மலர இந்த பொங்கல் திருநாள் வழிகாட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் - ராமதாஸ்
"நாம் சிந்திய வியர்வை ஒருபோதும் வீணாகாது"
"அடுத்தடுத்து வரப்போகும் செய்திகள் உணர்த்தும்"
வாழ்த்துச் செய்தியில் ராமதாஸ் தகவல்

தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாள் புதிய ஒளி ஏற்றட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, தமிழ்ச் சொந்தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என தெரிவித்துள்ள ராமதாஸ், அதற்காக சிந்திய வியர்வை ஒரு போதும் வீண் போகாது என்பதை, தை மாதம் பிறந்ததும் அடுத்தடுத்து வரப்போகும் செய்திகள் உணர்த்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இருள் விலகி, விடியல் பிறக்கும்"
"திமுக ஆட்சி அமைய தீர்ப்பளிக்க வேண்டும்"
வாழ்த்து செய்தியில் வைகோ வேண்டுகோள்
இருள் விலகி, தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன், பொங்கல் வாழ்த்து கூறுவதாக, மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்வை மத்திய அரசு சூறையாடி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக அரசை வீழ்த்தி, மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்து, திமுக ஆட்சி அமைய மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் வேண்டுவதாக கூறியுள்ளார். 







Next Story

மேலும் செய்திகள்