சென்னை மாநகரில் போகி கொண்டாட்டம் - பனிமூட்டத்துடன் சேர்ந்து கொண்ட புகை மூட்டம்

சென்னையில் பொதுமக்களின் போகி கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
x
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளின் முதல் நாளான இன்று போகி பண்டிகை, பொதுமக்களால் கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வழக்கப்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த தேவையற்ற பொருட்களை, அதிகாலை வேளையில் தீயிட்டு கொளுத்தினர். இதனால், மாநகர் முழுவதும் பல இடங்களில் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. பனிமூட்டத்துடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு, சாலைகளில் பயணித்தனர். மேலும், போகி கொண்டாட்டத்தின் காரணமாக, சென்னையில் வழக்கத்தை விடவும் கூடுதலாக காற்று மாசு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்