"மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட, மீனவர்களின் நலன், மனித உரிமை முக்கியம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலன் மற்றும் அவர்களின் மனித உரிமைகளுமே முக்கியத்துவம் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட, மீனவர்களின் நலன், மனித உரிமை முக்கியம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
x
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும்  500 ரூபாய் வீதம், நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியும், முராரி கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ்  பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, வழக்கின் பிரதான கோரிக்கையை விடுத்து மெரினா கடற்கரையை அழுகுபடுத்துவதும், லூப் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், பிரதான கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது அவசியம் என்றாலும், அதை விட மீனவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கான மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தனர். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்