முதுநிலை சட்ட கல்விக்கு நுழைவு தேர்வு : "அரசிதழ் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை

முதுநிலை சட்ட கல்விக்கு அகில இந்திய நுழைவு தேர்வு என்ற அரசிதழ் அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதுநிலை சட்ட கல்விக்கு நுழைவு தேர்வு : அரசிதழ் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
x
முதுநிலை சட்டப் படிப்பிற்கு இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் மருத்துவ கனவைப் பறித்து விட்ட மத்திய அரசு , இப்போது இந்திய பார் கவுன்சில் மூலமாக சட்டக் கல்வியையும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டா கனியாக்கும் விதத்தில் 
அகில இந்திய நுழைவு தேர்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

இது  மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் ,  மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து கருத்து அறியாமல், முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்று  வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பினை இந்திய பார் கவுன்சில்  உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்