அண்ணனின் காதலுக்காக கொலையாளி ஆன தம்பி
பதிவு : ஜனவரி 08, 2021, 03:00 PM
ராணிப்பேட்டை அருகே தன் அண்ணனின் காதலுக்காக இளைஞர் ஒருவர் கொலையாளி ஆகி இருப்பது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள முப்பது வெட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்.  இவரின் மகன் சூர்யா. டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை முடித்துவிட்டு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை ஓரமாக சூர்யா உடலில் கத்தி காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே சூர்யாவை மீட்டு ஆற்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, இந்த தகவல் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சூர்யா காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணும் சூர்யாவை விரும்பி வந்ததை தொடர்ந்து இவர்களின் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிரச்சினையும் நடந்துள்ளது. ஏற்கனவே அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் அவரின் அத்தை மகன் சுதாகர். தன் அண்ணன் காதலிக்கும் அத்தை மகள் வேறு ஒருவரை காதலிப்பதால்  சூர்யாவின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் சுதாகரின் தம்பி அஜய். மேலும் தன் அண்ணன் சுதாகரை காதலிக்குமாறும் தன் முறைப்பெண்ணிடம் கூறியிருக்கிறார் அஜய். தன் முறைப்பெண்ணுடனான காதலை கைவிடுமாறு  பலமுறை எச்சரித்தும் 2 பேரும்  காதலை கைவிடாததால் சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அஜய். சூர்யா தன் வீட்டில் இருந்து வெளியே வருவதை அறிந்த அஜய், அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சூர்யா உயிரிழந்ததை தொடர்ந்து அஜயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14 views

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

34 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

33 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

82 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

43 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

118 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.