"மாஸ்டர்" படத்தை சட்ட விரோத இணைய தளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாஸ்டர் திரைப்படத்தை சட்ட விரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
நடிகர் விஜய், நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், இந்த படத்தை சட்டவிரோதமான இணைய தளங்களில் வெளியிட்டால் தங்களுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என வும் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 400 சட்ட விரோத இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட, தடை விதித்த இணையதள 29 சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்