சீன கடன் செயலி விவகாரத்தை கையில் எடுத்த அமலாக்கத்துறை - மத்திய குற்றப்பிரிவிடம் இருந்து ஆவணங்களை பெற்றனர்

லோன் தரும் சீனாவின் கள்ளச் செயலி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணையை இறங்கியுள்ளது.
x
லோன் கொடுப்பதாக கூறி அதிக வட்டி வசூல் செய்த விவகாரத்தில் சீனாவின் கள்ளச்செயலி பின்புலமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 2 சீனர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி உள்ளது. சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்தது எப்படி? இந்திய பணம் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்த தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறையினர் பெற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்