கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் பலி - இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு
பதிவு : ஜனவரி 07, 2021, 10:21 AM
கரூரில் கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கொடூர மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னால் நடந்தது என்ன?
கரூர் நகராட்சி பகுதியில் காமராஜர் சாலையில் வசித்து வருபவர் ஜெயராம். இவரின் மகன் ஹரிஹரன். 23 வயதான இவர் சலூன் கடை நடத்தி வந்தார். 

அதே பகுதியை சேர்ந்த 20 வயதான மாணவி,  அங்குள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை படித்து வருகிறார். 

இவருக்கும் ஹரிகரனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதல்... இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவரவே மகளை அழைத்து கண்டித்துள்ளனர். 

இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்கள், ஹரிகரனையும் கூப்பிட்டு எச்சரித்துள்ளனர். ஆனால் காதல் ஜோடிகளான இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். 

ஆனால் தொடர்ச்சியாக கொடுத்த நெருக்கடியால் ஹரிகரனிடம் கடந்த 2 மாதமாக எந்த வித தொடர்பும் இன்றி அந்த பெண் இருந்துள்ளார். காதலியை காணாமல் தவித்து போன ஹரிஹரன், தன்னுடனான காதலை தொடருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், இதற்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்தனர். ஹரிஹரனை செல்போனில் தொடர்பு கொண்ட பெண்ணின் பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். 

தங்கள் எதிர்காலம் கருதி தான் பேச அழைக்கிறார்கள் என கனவுகளோடு கிளம்பி போன ஹரிஹரனுக்கு அங்கு காத்திருந்த விபரீதம் தெரிய வாய்ப்பில்லை. 

சிவன் கோவிலுக்கு சென்ற ஹரிகரனை பெண்ணின் சித்தப்பா மற்றும் பெரியப்பா ஆகியோர் காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுக்கவே, வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென சுப்ரமணியபுரம் சினிமா பாணியில் மறைந்திருந்த ஒரு கும்பல், ஹரிஹரனை கொடூரமாக தாக்கியது. இதில் பலத்த காயங்களுடன் இருந்த அவரை ரோட்டில் தரதரவென இழுத்து வந்திருக்கிறது அந்த கும்பல்... பிரதான சாலையில் நடந்த இந்த சம்பவத்தை ஒருவர் செல்போனில் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்... 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துமாறு மனு - அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10 views

பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

106 views

மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

29 views

வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

631 views

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

43 views

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.