திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி - விதிமீறல் : மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம்

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி - விதிமீறல் : மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம்
x
இதில், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட தளர்வுகளுடன் கூடிய கொரோனா நெறிமுறைகளில், 

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள மத்திய உள்துறை செயலாளர்,

மத்திய அரசின் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனக்கூறி, தமிழக அரசு விதித்த உத்தரவை மாற்றி பிறப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்