பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் - ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் மெகராஜ் அறிவுறுத்தினார்.
பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் - ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தல்
x
கோழிப்பண்ணையாளர்கள் நுண்ணுயிரி பாதுகாப்பு முறைகளை (Bio-Security) கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. 

பிற மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை, கோழிக் குஞ்சுகள், தீவன மூலப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கொள்முதலை தவிர்க்கவும் அல்லது உரிய அனுமதி பெற்று கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேற்கண்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் அதனை அழித்து விட வேண்டும். அசாதாரண இறப்பு குறித்து உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். 

கால்நடை பராமரிப்புத்துறையில் உள்ள 45 அதி விரைவுக் குழுக்கள் தினந்தோறும் பண்ணைகளை கண்காணிக்கவும்,
சாதாரண இறப்பு கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்யவும் வேண்டும். 

வனத்துறையில் புதிய வனப்பறவைகளின் வரவு, அசாதாரண இறப்பு குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சித்துறை உணவு பாதுகாப்பு அலுவலர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தங்கள்  பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளை ஆய்வு செய்ய வண்டும்.

பொது சுகாதாரத் துறையினர், உயிரியல் தடுப்பு மருந்துகள், நச்சுக்கொல்லிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தி உள்ளார். 

கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், கோழிப்பண்ணையாளர்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

கோழிப் பண்ணைகளுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும், முட்டை அட்டை, கோழிகள் மீதும் கிருமி நாசினி தெளித்து அனுமதிக்க வேண்டும்

குப்பைகளை பராமரிப்பது, புழுக்கள் உற்பத்தி ஆகாமல் பாதுகாத்து அதன் மூலம் வனப்பறவைகளான கொக்கு, நாரை போன்றவை வராமல் பாதுகாக்க வேண்டும்

முட்டை, தீவனம், மூலப்பொருட்கள், கோழிக்குஞ்சுகள், கோழி குப்பை போன்றவற்றை கேரளாவில் கண்டிப்பாக கொள்முதல் செய்யக்கூடாது

அசாதாரண கோழி இறப்பு குறித்து, கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், 

இயற்கையாக இறக்கும் கோழிகளை பண்ணையில்
உள்ள இறப்பு குழியில் மட்டும் போட வேண்டும். 
பொது இடங்களிலோ, நீர் நிலைகளிலோ போடக்கூடாது.

வெளி ஆட்கள் கோழிப்பண்ணையை சுற்றி பார்ப்பதற்கு அனுமதிக்க கூடாது.

பிரதி வாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் பறவைக் காய்ச்சல் முன்னேற்பாடு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்