"2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் இல்லை?" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்

தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் இல்லை? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
x
வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 4 லட்சம் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  தேர்தல் பணியில் கடந்த சட்டமன்ற தேர்தலை விட இம்முறை ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இம்முறை கொரோனா காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் தேர்தல் மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  திட்டமிட்டபடி வரும் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்