யானைகளுக்கு ஞாபக மறதியா?! - மனித முகங்களை மறந்த யானைகள்

விலங்குகள் இனத்திலேயே அதிக ஞாபக சக்தி கொண்ட விலங்காகக் கருதப்படும் யானைகளுக்கு ஞாபக மறதி வந்து விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஏன் இந்த நிலைமை?
யானைகளுக்கு ஞாபக மறதியா?! - மனித முகங்களை மறந்த யானைகள்
x
கேரளாவில்  750க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளவை. இவை கோவில்களிலும், விழாக்களிலும், மரம் வெட்டும் தொழில்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவக்கூடும் என்ற ஐயத்தால், இந்த யானைகள் கடந்த 9 மாதங்களாக மக்களைப் பார்க்காமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இதுவே தற்போது வினையாக மாறியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட யானைகள் மனித முகங்களையே மறந்து விட்டன. 

இதையடுத்து, யானைகள் பொதுமக்களுடன் மீண்டும் சகஜமாகப் பழக, பாகன்களும்,  உரிமையாளர்களும் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு வருகின்றனர்.  யானைகளை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஹாயாக நடக்க வைப்பதன் மூலமும், கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதன் மூலமும் பழைய நிலைக்கு அவை திரும்பும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

 "மேற்கு தொடர்ச்சி மலைகளின் மகன்கள்" என்று அன்போடு அழைக்கப்படும் கேரள யானைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்