மழையால் அழுகிய நெற்கதிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழை காரணமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழை நீரில் அழுகி சேதமடைந்துள்ளன.
மழையால் அழுகிய நெற்கதிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
சின்னகண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்குளம், மானங்காத்தான், சின்னக்கண்ணூர் கிராமங்களில்சுமார் இரண்டாயிரம்  ஏக்கருக்கும் மேல் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்  மழையால் அழுகியுள்ளன. இந்நிலையில், மீதமுள்ள நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் முற்பட்டபோது, தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு குறைந்த அளவிலேயே கதிர் இயந்திரங்கள் வந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் கையால் அறுவடை செய்து அழுகிய பயிர்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீரில் மூழ்கிய 5 ஏக்கர் நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோவிலூர் பகுதியில் 5 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இங்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நேற்று பெய்த மழையில் மூழ்கியது, விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்