ஜல்லிக்கட்டு போட்டிக்கு பச்சைக் கொடி - தீவிரமாக தயார் செய்யப்படும் காளைகள்

தமிழக அரசு பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராக தொடங்கி விட்டன ஜல்லிக்கட்டு காளைகள்...
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பச்சைக் கொடி - தீவிரமாக தயார் செய்யப்படும் காளைகள்
x
பொங்கல் என்றதும் கரும்பு, பொங்கல்பானை, தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை,  புதிய திரைப்படங்கள் ரிலீஸ், விளையாட்டு போட்டிகள் இவை தான் நம் நினைவுக்கு வரும்... ஆனால் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு தான்... ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை  காணவே ஒரு தனி கூட்டம் உண்டு... ஆண்டு முழுவதும் தங்கள் காளைக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து, தகுந்த உணவு அளித்து, தீவிரமாக தாயார் செய்வது எல்லாம் அந்த ஒரு நாளுக்காக தான்..ஆனால், கடந்த ஆண்டில் அத்தனை பண்டிகையையும் முடக்கி விட்டது கொரோனா என்னும் அந்த கொடிய வைரஸ்...இதனால் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த‌தால், காளைகளை வளர்ப்போர் கவலை அடைந்தனர்.....இந்த நிலையில் தான் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியை வழங்கி, காளை வளர்ப்போருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‌து தமிழக அரசு...இதை தொடர்ந்து தேனியில் காளைகளை போட்டிக்கு தயார் செய்ய தொடங்கிவிட்டனர் அதன் உரிமையாளர்கள்....


Next Story

மேலும் செய்திகள்