கிராம‌ப்புற சிறுவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்- நடராஜன்
பதிவு : டிசம்பர் 31, 2020, 04:43 PM
சின்னப்பம்பட்டியில் பிறந்து இன்று சிட்னியில் கலக்கிக் கொண்டிருக்கும் சேலம் நடராஜன் பற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
2020... இப்போது மட்டுமல்ல... இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பின்னோக்கி பார்த்தாலும், மிகப்பெரிய அழிவை சந்தித்த ஆண்டு என்றே வரலாற்றில் பதிவாகியிருக்கும்  2020 ஆம் ஆண்டு....ஒன்றா இரண்டா எண்ணிலடங்கா சோகங்களை உள்ளிடக்கிய இந்த ஆண்டிலும், விரல் விட்டு எண்ணும் ஒரு சில ஆரோக்கியமான சம்பவங்களும் அரங்கேறத்தான் செய்தன...அப்படி தமிழகத்திற்கு கிடைத்த ஒரு ஆறுதல் பரிசு நடராஜன்...சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பிறந்த ஒரு ஏழைச்சிறுவன்... இன்று சிட்னியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறான் என்றால் சும்மாவா... விவரம் தெரிந்த‌து முதலே ஊரில் விளையாட்டுத்தனமாக கிரிக்கெட்டில் மூழ்கிய  நடராஜனுக்கு, கிரிக்கெட் என்ற விளையாட்டே 20 வயதில் தான் தெரிந்திருக்கிறது...நீயெல்லாம் கிரிக்கெட்டில் சாதிப்பது எளிதல்ல என மற்றவர்கள் கூறிக்கொண்டிருக்க, எனக்கு பிடிக்கும் நான் விளையாடுகிறேன் என எதிர்பார்ப்பே இல்லாமல் விளையாட்டில் வெறி பிடித்தவராய் திரிந்திருக்கிறார் நட்டு....அவரது நம்பிக்கைக்கு பலனாய் வந்து சேர்ந்த‌து டி.என்.பி.எல்... இடது கையில் நடராஜன் வீசும் யார்க்கர்கள் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச்செய்ய, சேவாக் வரை கவனம் பெற்றார் நடராஜன்... சேவாக்கின் உதவியால், 2017 ஆம் ஆண்டிலே பஞ்சாப் அணிக்கு ஏலம் போனாலும், அவருக்கு தேவையான வாய்ப்பு கிடைத்த‌து என்னவோ ஐ.பி.எல் இல் தான்... சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கி கலக்கினார் நடராஜன்...  இதனால் நடராஜனை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சேர்க்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இருந்தபோதும், வலைப்பயிற்சிக்காகத்தான் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார் நடராஜன்...ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட மற்றொரு தமிழக வீர‌ர் வருண் சக்ரவ‌ர்த்தியின் கெட்ட நேரம், நடராஜனுக்கு நல்ல நேரமாக அமைந்த‌து...  காயம் காரணமாக தொடரில் இருந்து வருண் வெளியேற, 15 பேருக்கான பட்டியலில் நட்டுவிற்கு இடம் கிடைத்த‌து. ஆனாலும் ப்ளேயிங் லெவனில் இடம் என்பது எட்டாக்கனிதான்...  ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டி... 2 க்கு 0 என தொடரை கைப்பற்றி கொக்கரித்துக்கொண்டிருந்த‌து ஆஸ்திரேலிய அணி... தொடர் தான் போய்விட்டதே, விளையாடாத வீர‌ர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்ற கோலியின் கரிசனத்தில் மைதானத்தில் காலடி பதித்தார் நம் நட்டு...அந்த போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார் நடராஜன்... அந்த விக்கெட்டுகளை தமிழகமே கொண்டாடியது... அதன் பின்னர் 20 ஓவர்கள் போட்டியில் களமிறக்கப்பட்ட நடராஜன், முதல் போட்டியில் 3 , 2 வது போட்டியில் 2 என முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு உதவினார். இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது...  

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

251 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

195 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

157 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

133 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

56 views

பிற செய்திகள்

சொந்த மண்ணில் ஆஸி.யை வீழ்த்தி அசத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்றது.

8 views

இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்தியா த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்று உள்ளது.

76 views

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் கலக்கும் சுந்தர் - அனுபவவீரரைப் போல் அட்டகாச பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.

61 views

இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட் போட்டி- 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ்

பிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற 328 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்து உள்ளது.

12 views

நடராஜனை ஜாலியாக கலாய்த்த அஸ்வின்

வலைப்பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற தமிழக வீர‌ர் நடராஜன், பல வீர‌ர்களின் காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்தார்.

7441 views

இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் போட்டி - அறிமுக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.