இலங்கையின் மாகாண ஒழிப்பு திட்டம்:"பிரதமர் மோடி எச்சரிக்க வேண்டும்" - தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
இலங்கையின் மாகாண ஒழிப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் வகையில், உள்நோக்கத்துடன் இந்த திட்டத்தை இலங்கை அரசு அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும் செயல்படுவதாக விமர்சித்துள்ள டி.ஆர்.பாலு, மாகாண ஒழிப்பு திட்டம் இந்தியா- இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையை கடுமையாக எச்சரிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
Next Story